விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை ஒட்டிய கடல் பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையொட்டி உள்ள பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. மரக்காணம், கூனி மேடுக்குப்பம், அனிச்ச குப்பம், கோட்டகுப்பம், முதலியார் சாவடி, அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களில் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. படகு மட்டும் அலைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் படைகளின் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ராக்ட்டர்களை கொண்டு படகுகள் மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்திவைக்கபட்டுள்ளது. மரக்காணத்தை சுற்றியுள்ள 1500-க்கும் மேற்பட்ட படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.