துபாயில் நடந்த உலக கலாசார திருவிழாவில் தமிழ் சிறந்த கலாச்சாரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
துபாயில் இஸ்லாமிய சமய அறநிலையத்துறையின் சார்பாக பன்முக கலாச்சார திருவிழா அங்குள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரபு, ஸ்பானிஷ், ஜெர்மனி, ருமேனியா, தமிழ், மலையாளம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கலாச்சார அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இதில் தமிழ் அரங்கத்தில் இடம்பெற்ற திருக்குறள், தமிழ் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழரின் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்களின் பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டு வியந்தனர். இதே போல் அனைத்து மொழி கலாச்சார அரங்கங்களையும் பார்த்து ரசித்த நடுவர்கள் சிறந்த கலாச்சாரமாக தமிழை தேர்ந்தெடுத்து முதல் பரிசை வழங்கினார். இதில் வங்காள கலாச்சாரத்திற்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.