Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடல் போல் காட்சியளித்த கூட்டம்…. புகழ்பெற்ற கோவில் கும்பாபிஷேகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹூதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க, யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கழுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |