Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுளாக இருக்காரு..! ஏன் இப்படி அழிக்குறீங்க ? கொந்தளித்த ராம ரவிக்குமார் …!!

பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், இதற்கு முன்னால் பல வீடியோக்களில் அவர்கள் பேசி இருக்கிறார்கள். இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால் இப்போ U2 புரூட்டஸ் தொடர்ந்து ஏன் இது மாதிரி வேலைகளை செய்கிறார்கள் என்று கேட்கிறேன். இப்போ சித்திரையா, தையா என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும், இப்ப இருக்கக்கூடிய இந்த தமிழ் வருடப்பிறப்புகளுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கு என்று சொல்கிறார்கள்.

சரி அப்படியே தமிழர்களுக்கு புத்தாண்டு இருக்கக்கூடிய தமிழ் பெயரில் இருந்திருக்கும் என்று சொன்னால் நமக்கு முன்பாக இருந்திருக்கலாமே ஏன் இல்லை ? இப்போ வள்ளுவருடைய அடையாளங்களை அழித்தார்கள், வள்ளலாருடைய அடையாளங்களை அழித்தார்கள், ஆண்டாள் உடையை அடையாளங்களை அழித்தார்கள். குறிப்பிட்டு இந்து மதத்தில் எங்களின்   வாழ்வியல் வழிகாட்டியலாக இருக்கக்கூடியவர்களை, அந்த அடையாளங்களை எல்லாம் அழித்துவிட்டு, திராவிட திரிபு வாதங்களை இவர்கள் புகுத்தக்கூடிய வேலைகளை செய்கிறார்கள், இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

திருவள்ளுவருடைய அடையாளம் மயிலாப்பூரில் இருக்கக்கூடிய திருவள்ளுவரின் திருக்கோவில். நாங்கள் கடவுளாக நினைக்கின்றோம். தெய்வ புலவன் அவன். அவன் நெற்றில் திருநீர் அணிந்து வணங்கக்கூடிய கடவுளாக இருக்க கூடியவன். அவரின் அடையாளங்களை அழிக்கக்கூடிய வேலைகளை என்னவென்று சொல்வது. வள்ளுவனுக்கு கோவில் இருக்கா ? இல்லையா ? அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கா ? இல்லையா ? தெய்வ புலவனா ? இல்லையா ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |