Categories
அரசியல்

“கடவுளாக மதிக்கப்பட வேண்டியவர்கள்”…. மாணவர்களின் ஒழுக்கக்கேடு வேதனை அளிக்கிறது… பாமக நிறுவனர் வருத்தம்…!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் மாணவர்களை ரெகார்ட் நோட்டை எழுதிவந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருகின்றார். இதில் சில மாணவர்கள் எழுதாததை ஆசிரியர் கண்டித்ததாக  தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை  திட்டி தாக்க முயலும் அளவிற்கு மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல் ரெக்கார்டு நோட் எழுதாததற்காக கண்டித்த  ஆசிரியரை  மாணவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் காணொளி வேகமாக பரவி வருகின்றது. இந்த நிகழ்வு கடுமையாக தண்டிக்க கூடியதாகும். மேலும் தாய், தந்தையருக்கு பிறகு மாணவர்கள் வாழ்வில் ஆசிரியர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள்தான் மாணவர்களை கரைசேர்க்கும் ஓடங்கள் அதனால் கடவுளாக மதிக்க வேண்டிய அவர்களை திட்டி தாக்க முயலும் அளவிற்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

மேலும் திரைப்படங்களில் ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கப்படும் சமூக சூழலில் தான் இதற்கு காரணம் ஆகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் பள்ளிகளில் படங்களுக்கு இணையாக நீதி போதனைகளும் ஒழுக்க போதனைகளும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கின்றார்.

Categories

Tech |