Categories
சினிமா

கடவுளே இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப் போகிறோம்?…. இயக்குனர் நாகேந்திரன் இரங்கல்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி நேற்று அருண்ராஜ் காமராஜ் மனைவி சிந்துஜா பாதிப்பால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இன்று பிரபல நடிகர் நித்திஷ் வீரா உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் நித்தீஷ் வீரா மற்றும் அருண்ராஜா காமராஜ் மனைவி மறைவுக்கு இயக்குனர் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், கடவுளே இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோமோ தெரியவில்லை… நண்பர்களே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருங்கள். நித்தீஷ் வீரா, சிந்துஜா அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |