கோவில் எந்த சமூகத்தினரையும் அங்கீகரிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கோவில் என்பது எல்லோருக்கும் சமமானது. எல்லா சமூகத்தினரை சார்ந்தவர்களும் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் ஒரு சிலர் தங்கள் இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் தான் கோவிலுக்கு வரவேண்டும், மற்றவர்கள் வரக்கூடாது என்று பிரச்சினை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவானைக்காவல் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “கடவுள் எந்த சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை. பிரார்த்தனைக்கு வரும் மனிதனை தான் அங்கீகரிக்கிறார். இனப்பாகுபாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கடவுளை வைத்து பிரச்சினை செய்பவர்களுக்கு சவுக்கடி கருத்தை தெரிவித்துள்ளார்.