சென்ற 2005 ஆம் வருடம் சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதை அடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன்யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளரானார். இதன் பிறகு சென்ற 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதன் பின்னர் பிச்சைக்காரன், சலீம், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி கடவுள் தன் முன் வந்து நின்றால் என்ன கேட்பேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, கடவுளை கேட்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், உங்கள் முன் கடவுள் வந்தால் என்ன கேட்பீங்க என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.