கிராமப்புறங்களில் சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் சாதாரணமாக காணப்படக்கூடிய ஒரு மூலிகை தாவரம் தான் கீழாநெல்லி செடி. இது புளியமர இலைகளைப் போன்று காணப்படும் ஒரு சிறு தாவரம். கீழாநெல்லி இலைகளில் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இதற்கு கசப்பு சுவையை கொடுக்கிறது. இதில் சிறிது சிறிதாக நெல்லிகாய் போன்று காய் இருப்பதால் கீழாநெல்லி என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த கீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் குறித்து பார்க்கலாம்.
இதில் பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு சத்து, மினரல், கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்து இருக்கிறது. எனவே இதனை அப்படியே அரைத்து சாறை குடிக்கலாம். தோசை மாவில் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். இதனை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கூந்தல் வளர்ச்சியில் நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். மஞ்சள் காமாலைக்கு ஒரு நாட்டுமருந்து வைத்தியம் ஆக மஞ்சள் கீழாநெல்லி பயன்படுத்தபடுகிறது, இதனை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து சிறு உருண்டையாக்கி தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தலாம்.
இதனால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியோர்கள் முப்பது மில்லி அளவில் சிறியவர்கள் 15 மில்லி அளவில் குடித்தால் கல்லீரல் சுத்தமாகும். கல்லீரல் கோளாறுகள் உண்டாகமல் இருக்கவும் கீழாநெல்லி சாறு குடிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரக பிரச்சனை சந்திக்கிறார்கள், சிறுநீரக கற்கள் சிறியதாக இருக்கும்போதே அதைக் கரைத்து உடைத்து வெளியேற்றிவிட்டால் இந்த ஆபத்தை உண்டாக்காது. எனவே சிறுநீரகத்தில் தங்கி விடும் நச்சுக்களை கீழாநெல்லி சரிசெய்கிறது,
கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து மூன்றில் ஒரு பங்கு அளவு நீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இதை ஒரு பங்காக சுண்டியதும் குடித்து வர வேண்டும். தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். சர்க்கரை நோயாளிகள் மூன்று வேளை உணவுக்கு முன்பாக கீழாநெல்லி பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இதை குடித்து அரை மணி நேரத்திற்கு முன்பும் குடித்த பிறகு அரை மணி நேரம் கழியும் வரை எந்த ஆகாரமும் சாப்பிடக்கூடாது.