நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகர் ,நடிகைகளை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.
தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தென்னிந்தியாவில் மக்கள் சினிமாவிற்கு அதிக ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகர், நடிகைகளை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் . தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படப்பிடிப்புகளை திட்டமிட்டு விரைவாக முடித்து விடுகின்றனர்.
ரசிகர்களின் பெரும் ஆதரவால் 200 கோடிக்கும் படங்கள் வசூல் செய்யப் படுகின்றன. தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்க்கிறார்கள் . ஆட்டம் பாட்டம் என தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படத்தை பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.