பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமல்லா தனது வீட்டில் உயர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா. 36 வயதான இவர் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியில் வராததால் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பிரதியூஷாவை அவரது குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர்.
அவருக்கு அருகே கார்பன் மோனாக்சைடு வாயு அடைத்திருந்த பாட்டிலை காவல் துறையினர் கைப்பற்றினர். அதுமட்டுமில்லாமல் அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் “நான் தனிமையான வாழ்க்கை வாழ்கிறேன். இந்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை. எனது பெற்றோருக்கு சுமையாகவும் நான் இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்”… என்று எழுதியிருந்தார் . இவர் தற்கொலை மூலமாகத்தான் உயிரிழந்தார் என உடற்கூறு முடிவுகளும் தெரிவித்துள்ளது. இருப்பினும் இவரது மரணத்தில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.