Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடிதம் எழுதி வைத்த வாலிபர்…. தி.மு.க தொண்டர் கொடூரமாக வெட்டி கொலை…. கோவையில் பெரும் பரபரப்பு…!!

தி.மு.க தொண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் நாகம்மா புதூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவண சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சீட்டு நடத்தி வந்ததோடு, வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சரவண சுந்தரத்திற்கும் ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் சரவண சுந்தரம் மைல்கல் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வன் தனது நண்பரான ராஜராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் அரிவாளால் சரவண சுந்தரத்தை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சரவணசுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரவண சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வன் மற்றும் ராஜராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க-வில் இணைந்த சரவணன் சுந்தரம் எனது உயிருக்கு தமிழ்ச்செல்வனால் ஆபத்து இருக்கிறது என வீட்டில் கடிதம் எழுதி வைத்துள்ளார். தற்போது சரவண சுந்தரம் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |