Categories
மாநில செய்திகள்

கடிதம் எழுதுவது மட்டுமல்லாமல்…. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் -டிடிவி தினகரன்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது அப்படி ஒன்று ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |