Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெருநாய்கள்…. புள்ளிமானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மலையடிவாரத்தில் 3 வயது மதிக்கத்தக்க மான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. அப்போது தெருநாய்கள் ஒன்றுசேர்ந்து அந்த மானை கடித்து குதறியது. இதனால் அந்த ஆண் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

Categories

Tech |