தெரு நாய்கள் கடித்ததால் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தெரு நாய்கள் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றது . இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் இருக்கும் ஆசாத் தெருவில் விளையாடி கொண்டிருந்த சாப்தீன் என்ற சிறுவனை தெரு நாய்கள் கடித்துவிட்டது. மேலும் முஸ்தபா, சாதிக் உள்பட பத்து பேரை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியது. இதனால் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.