நாய்கள் கடித்ததால் 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 50 ஆடுகளை கீழக்கொந்தை பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டிற்கு அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மெய்சலுக்கு சென்ற ஆடுகளை ராமச்சந்திரன் பண்ணையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை வந்து பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதால் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. ஆனாலும் ஆடுகள் இறந்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.