கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திகடரபள்ளி கிராமத்தில் விவசாயியான முனியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை கொட்டகையில் இருந்த 7 செம்மறி ஆடுகள், 5 கோழிகள் மர்மமான முறையில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து முனியம்மா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பார்வையிட்டனர். மேலும் வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories