கரூரில் வெறி நாய் கடித்து 15 செம்மறி ஆடுகள் இறந்தன.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் காட்டு முன்னூரில் வசித்து வருபவர் நடராஜன்(65). இவர் 50-க்கு அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று செம்மறி ஆடுகளை தனது சொந்த நிலத்தில் மேய்வதற்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் அந்த செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதனால் 15 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
மேலும் பத்துக்கும் அதிகமான ஆடுகள் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த வருவாய் துறையினர் கால்நடை துறையினர், உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காயமடைந்த ஆடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 16 ஆம் தேதி அன்று அந்த பகுதியில் 20 செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்தது தெரியவந்துள்ளது.