வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய் என இருந்த நிலையில்.
தற்போது 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளியோர் வெங்காயத்தை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து காய்கறி கடைகளிலும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.