ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததற்கு யோகி பாபு அசால்டாக பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் தற்போது உச்ச காமெடி நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. இவர் முதலில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது முக்கிய நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் விஜய் ,அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களைக் கவர்ந்து வருகின்றார். மேலும் இவர் மண்டேலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் யோகி பாபு அண்மையில் விஜயுடன் இணைந்து தளபதி- 66 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் விஜயுடன் நடித்த மூன்று படங்களுமே பிளாப் என விமர்சித்திருந்தார். அந்த மூன்று படங்கள் சர்க்கார், பிகில், பீஸ்ட் ஆகும். இதை குறிப்பிட்டு நீங்கள் விஜய்யுடன் நடித்த திரைப்படம் ஓடாது என விமர்சித்த நிலையில் யோகி பாபு கூலாக நன்றிப்பா என பதிலளித்திருக்கிறார். யோகி பாபுவின் மற்ற ரசிகர்கள் விமர்சித்த அந்த ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்க்கார், பிகில், பீஸ்ட் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களும் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்து இருகின்றது என பதிலடி கொடுத்துள்ளனர். இவ்வாறு மற்ற ரசிகர்கள் யோகி பாபுக்கு ஆதரவாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.