Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

கடுமையாக விளாசிய நெட்டிசன்ஸ்…. “அதிரடி முடிவை எடுத்த மந்திரா பேடி”… என்ன செய்தார் தெரியுமா…???

நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததால் மந்திரா பேடி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

மந்திரா பேடி இந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் 1994ஆம் வருடம் வெளியான சாந்தி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதன்பின் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் தமிழில் சிம்புவின் மன்மதன் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார்.

இவர் சென்ற 1999-ஆம் வருடம் தயாரிப்பாளர் ராஜ் கவுஷலை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் இவரின் கணவர் ராஜ் கவுசல் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரின் மரணம் பெரும் இழப்பாக இருந்த நிலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார்.

இந்நிலையில் இவர் இணையத்தில் பகிர்ந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றார்கள். மந்திரா பேடி தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படத்தில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக நின்றபடி போஸ் கொடுத்து இருக்கின்றார். இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ, “கணவனை புதைச்ச இடத்துல என்னும் புல்லு கூட முளைக்கல அதுக்குள்ள இந்த ஆட்டம் தேவையா” என விமர்சித்து வருகின்றார்கள். மேலும் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்கள். இதனால் கடுப்பான இவர் யாரும் கமெண்ட் செய்ய முடியாதப்படி கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.

Categories

Tech |