Categories
உலக செய்திகள்

கடுமையான சூழ்நிலை நெருங்கப்போகிறது.. நாட்டு மக்களை எச்சரித்த அதிபர்..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடும் நெருக்கடி ஏற்படப்போவதாக நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.  

வடகொரியாவில் மனித உரிமைகள் குழுக்கள் கடும் உணவு பற்றாக்குறை, பொருளாதாரத்தின் உறுதியற்ற நிலைப்பாடு ஆகியவற்றை நாடு சந்திக்க போகிறது என்று எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கட்சி மாநாட்டில் பேசிய போது, தற்போது உள்ள சூழ்நிலையை கடந்த 1990ஆம் வருடங்களில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தன் எல்லைகளை வடகொரியா அடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே நாடு மிகவும் மோசமான நிலை மற்றும் இதற்கு முன் பார்க்காத அளவிற்கு பல சவால்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே வடகொரியாவில் மக்கள், உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள் என்று பல மாதங்களாகவே எச்சரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சீனாவின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள நகரங்களில் தான் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவிலிருந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாக எந்தவிதமான உணவுகளும் நாட்டிற்குள் கொண்டு செல்லப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளரான லினா யூன் தெரிவித்துள்ளார். மேலும் வடகொரியாவில் பிச்சை எடுப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். மேலும் பசியால் எல்லைப்பகுதியில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களிடம் பேஸ்ட், சோப்பு மற்றும் பேட்டரிகள் போன்றவைகூட இல்லை என்றும் லினா யூன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |