அமெரிக்காவில் பெண்ணின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷகினா இவர் (ஓரினச்சேர்க்கையாளர்) ஜெனட் மெட்லி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஷகினா வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார்.
அவர் வீட்டின் அருகில் வரும்போது மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த ஷகினா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அந்த மருத்துவமனை மருத்துவர்கள் X -Ray , ஸ்கேன் போன்ற எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் கட்டுப்போட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிய வைத்தனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த சில நாட்களில் ஷகினாவின் பின்பகுதி தலையில் அதிக வலி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேறு ஒரு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு X -Ray எடுக்கப்பட்டது அந்த X -Rayயை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் ஷகினாவின் மண்டை ஓடு பகுதியில் துப்பாக்கி குண்டு சிக்கியிருப்பது தெரிந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து குண்டு அகற்றப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.