Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நேற்று அதிகாலை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் காலை 8:30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |