திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பக்தர்கள் மின்இழுவை ரயில், ரோப்கார், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்கின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பழனியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நேற்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ரோப்கார் சேவையை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய ரோப்கார் சேவை பனிமூட்டம் விலகிய பிறகு காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் தாமதமானதால் மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.