Categories
மாநில செய்திகள்

கடுமையான பனிமூட்டம்… 1/2 மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம்… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தூத்துக்குடியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 6:20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் சுமார் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமிட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் வானிலை சீராகாத காரணத்தால் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, வானிலை சீரடைந்த பின்னர்  விமான சேவை தொடங்கும்  என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |