Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடுமையான வயிற்று வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலி தாங்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் மேலத்தெருவில் விவசாயி கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வயிற்று வலி அதிகமானதால், வேதனை தாங்கமுடியாமல் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |