Categories
லைப் ஸ்டைல்

கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க… இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

கடுமையான வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் நம் உடலை பாதுகாக்க சில எளிய முறைகள் பற்றி பார்ப்போம்.

முதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும்.

பழச்சாறு குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, மாதுளஞ்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை அறுந்தவேண்டும். நீராகாரம், மோர், கரும்புச் சாறு, இளநீர் ஆகியவற்றையும் சேர்த்துகொள்ளவேண்டும்.காய்கறிகளிலும், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பூசணி, தக்காளி போன்றவற்றிற்கு வெயில்காலத்தில்முக்கியத்துவம் கொடுங்க்கலாம்.

நேரடி வெயிலை முடிந்தவரை தவிர்க்கலாம். பகலில் வெளியே போகும்போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது மெல்லிய பருத்தித் துணியால் முக்காடு போல் இட்டுக் கொள்ளலாம். முடிந்தவரை, வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

பளபளக்கும் பட்டு உடைகள், சிந்தடிக் துணிகள் போன்றவற்றை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது அவசியம். மெல்லிய பருத்தி ஆடைகளே இந்தக் காலகட்டத்திற்கு ஏற்பானவை. வெளிர் நிற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது

Categories

Tech |