நடிகர் ரஜினிகாந்த் நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து கட்சி தொடங்குவது பற்றி ஜனவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிதான் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதில் சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று ரஜினி கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நிர்வாகிகளை மாற்றக் கூடும் என்று எச்சரித்த ரஜினி, தொடர்ந்து உறுதியாக செயல்படுங்கள் நல்ல முடிவை விரைவில் தெரிவிப்பேன் என உறுதியளித்துள்ளார்.