கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்துள்ளதால் ஒரு பீப்பாய் விலை 90.23 டாலராக உள்ளது. சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதேபோல் வரிக்குறைப்பு செய்யப்பட்ட போது மாற்றம் செய்யப்படாததால் என்னை நிறுவனங்கள் லிட்டருக்கு 14 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை இழப்பை சந்தித்தன.தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதை ஈடு கட்டும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது .இதன் எதிரொலியாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.