பாஜக நிர்வாகிகள் தொடர்பாக சமீப காலங்களில் சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலைநேற்று மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பேசிய அவர், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் டுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், கட்சி பணிகளில் கவனம் செலுத்தவும்நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.