ஜியோவின் வருகைக்கு பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மோசமான சரிவினை கண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜியோவின் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் வோடாபோன் ஐடியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
கடந்த காலாண்டில் ரூ.6,985 கோடியாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நஷ்டம், நடப்பு காலாண்டில் ரூ.7,312 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி மொத்த கடன் ரூ.1.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த காலாண்டில் ஒரு வாடிக்கையாளர் மூலம் ரூ.107வருமானம் கிடைத்த நிலையில் தற்போது 104 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.