ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்குசூடான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடாக இருக்கிறது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல நாடுகளிலிருந்து குடியேறிவர்களாகவும் இருக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கான உணவு தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிதிப்பிரச்னை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் உணவு நிவாரணம் நிறுத்தப்படுவதாக ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டு இருப்பதால் தெற்குசூடானில் சுமார் 17 லட்சம் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.