Categories
தேசிய செய்திகள் விவசாயம்

கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அத்தியவசிய பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விவசாயிகளுக்கு பணவீக்கம் 6.9 சதவீதம் உயர்ந்தது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு பணவீக்கம் 6.33 சதவீதமாக உயர்ந்தது.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆலைகளில் விலை உயர்வு இந்த பணவீக்கத்திற்கு முக்கிய காரணம். ஆடைகள் மற்றும் படுக்கைக்கு தேவையான பொருள்கள், காலணிகள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மற்றும் கிராம தொழிலாளர்களுக்கான பணவீக்கம் உயர்ந்துள்ளது. பட்டு விலை,பிளாஸ்டிக் காலணிகள் மற்றும் தொல்பொருள் காலணிகளின் விலை உயர்ந்ததுதான் பணவீக்கத்திற்கு மிக முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களை பொறுத்தவரை கோதுமை ஆட்டா, கம்பு, ஆட்டுக்கறி, பால், கடலெண்ணெய்,மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு பணவீக்கத்திற்கு வழிவகுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |