கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலூர், ஆண்டிப்பட்டி கோட்டை, வேலம்பாடி, பள்ளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இந்நிலையில் விவசாய பயிர்கள் தெரியாத அளவிற்கு பனி மூடியதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனையடுத்து உடலை வருத்திக்கொண்டு அதிகாலையில் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலையில் செல்கின்றனர். கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.