ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களாக அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. பனிப்பொழிவு நேற்று அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் குப்வாரா பிரிவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைப்போலவே கெரான் பிரிவில் பனியில் செல்லக் கூடிய திறன் வாய்ந்த ஸ்கூட்டரின் மூலம் ரோந்து செல்லும் பணியிலும் ராணுவ படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.