Categories
தேசிய செய்திகள்

கடும் பாதிப்பை சந்தித்துள்ள தெலுங்கானா… ரூ.10 கோடி நிதி வழங்கிய தமிழக முதல்வர்… தமிழிசை நன்றி…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், “தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெரும் சேதங்களை சந்தித்துள்ளது. மழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மட்டும் தமிழக மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தெலுங்கானாவில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவுவதற்கு தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பாக தேவையான பாய் மற்றும் போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” மழை மற்றும் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ள தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்”என்று கூறியுள்ளார்.

Categories

Tech |