அதிபர் சர்வதேச நிதிய குழுவை சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசு சர்வதேச நிதிய குழுவிடம் கடன் கேட்டுள்ளது. இதற்காக சர்வதேச நிதிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று சந்தித்து பேசினார். அப்போது 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால் பொருளாதார நெருக்கடியை எங்களால் மீட்டெடுக்க முடியும் என்று இலங்கை கூறியுள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 2-ம் கட்ட பேச்சு வார்த்தையில் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.