வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கைலவானம்பேட்டை பகுதியில் சினேகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென வீட்டில் வாந்தி எடுத்த சினேகா மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.