ரஷ்ய நிர்வாகம் மறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரஷ்ய அரசு, நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இதுதொடர்பான தகவலை தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய அரசினால் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அதிகாரிகளை விரும்பத்தகாத மக்களாக தெரிவித்துள்ளது. இது மட்டுமன்றி ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்ட மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து கண்டித்ததோடு உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் ஈடுப்பட்டதற்காக கண்டனங்களை தெரிவித்தது.
அதாவது கடந்த ஜனவரி 23-ம் தேதியன்று ரஷ்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டங்களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் ஸ்வீடன் மற்றும் போலந்து தூதர்கள் மற்றும் மாஸ்கோவில் இருக்கும் ஜெர்மன் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1961 ஆம் வருடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வியன்னா மாநாட்டின் வழிமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட மூன்று நாடுகளின் தூதர்கள் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
இதற்கிடையில் ஜெர்மன் அரசாங்கமானது, ரஷ்ய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக பின்விளைவுகளையும் சந்திப்பீர்கள் என்று எச்சரித்துள்ளது. மேலும் ஜேர்மன் சான்சலர் மெக்கல் கூறியதாவது, இவ்வாறு நாடு கடத்தப்படும் செயல் அநியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.