இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை தொடங்கிய முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. முந்தைய நாளை விட 5.9 சதவிகிதம் பங்குச்சந்தை குறியீட்டு எண் வீழ்ச்சி அடைந்ததால் அரை மணி நேரம் பங்குச்சந்தை நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.