ரயில்வே தண்டவாளம் திடீரென தீப்பிடித்து எந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் நீச்சல் குளங்கள், தண்ணீர் பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இங்குள்ள லண்டன் விக்டோரியா நகரில் ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.
இந்த தண்டவாளம் திடீரென கடும் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தண்டவாளம் தீப்பிடித்து எரியும் புகைப்படத்தை தென்கிழக்கு ரயில்வே இயக்குனர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்