Categories
மாநில செய்திகள்

கடைகளில் கையுறை அணிவதை…. கட்டாயமாக்க தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பேக்கரிகள், கடைகளில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செய்யும் போது எச்சிலையும், பிளாஸ்டிக் கவர்களை பிரிப்பதற்காக ஊதுவதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருக்கலாம் என்பதனால் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதியின் விசாரணைக்கு வந்த போது இதுபோல ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கான அரசாணை மட்டும் போதாது போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து நீதிபதிகள் உணவு பொருட்களை கையாளும் பணியில் உள்ளவர்கள் கையுறை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுடைய ஆரோக்கியத்தில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும், வருமுன் காப்பதே சிறந்தது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |