கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஹோட்டல்கள், கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு விற்பனைக்காக வைத்திருக்கும் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா வெகு வரிசையாக தொடங்கியது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்கு வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது சோப்பு தூள் கலக்கப்பட்ட கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதேபோன்று 6 கிலோ மசாலா கடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு மளிகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 40 பாட்டில் சில்லி சாஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.