மாநகராட்சி அதிகாரிகளால் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கடந்த ஜூன் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று பெரிய கடைவீதியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 1 1/4 லட்ச ரூபாயாகும். இந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளருக்கு ரூபாய் 50,000 அபராதமும் விதித்தனர்.