நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலையில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின் படி, துணை தாசில்தார் சதீஷ் நாயக் தலைமையில் வருவாய் அலுவலர் சகுந்தலா தேவி உட்பட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். இதேபோல் மற்றொரு கடையில் இருந்தும் 1 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
Categories