Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அவ்ளோ நேரம் அங்கத்தான் இருந்தோம்…. இரவு நேரத்தில் கடையினுள் புகுந்த மரம் நபர்கள்…. கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 3 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராட்டினங்கிணறு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கங்காதுரை பேக்கரியில் 20,000, சந்திரசேகருக்கு சொந்தமான கோழி கடையில் 500 மற்றும் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் ரூபாய் 1000 என மர்ம நபர்கள்  திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து காலையில் கடைக்கு சென்று பார்த்த முதலாளிகள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது வடமாநில வாலிபர்கள் 2 பேர்  திருடியது தெரிய வந்துள்ளது. இதனால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |