Categories
மாநில செய்திகள்

கடைகளில் பொருட்கள் வாங்க…. குவிந்த கூட்டத்தால்…. கொரோனா பரவும் ஆபத்து…!!!

தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தமிழகமெங்கும் மக்கள் அச்சத்தின் காரணமாக காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்கு சந்தைகளில் கூட்டம் கூட்டமாக கூடினர். இதனால் சமூக இடைவெளியை கூட கடைப்பிடிப்பதையும் மறந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளனர். இதன் காரணமாக தீவிரமாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |