வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் வருகின்ற 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடுதழுவிய பந்த் அறிவித்துள்ளனர். அன்று ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவை செயல்பட அனுமதிக்க படாது. அரசு வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.