Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள குமணன்தொழு கிராமத்தில் விருமாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல விருமாண்டி கடையை திறப்பதற்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 8,000 ரூபாய் திருடு போனது தெரியவந்துள்ளது. இதேபோல் விருமாண்டி பெட்டி கடைக்கு அடுத்துள்ள முத்தையா என்பவரின் பலசரக்கு கடையில் இருந்த 4,000 ரூபாயும் திருடு போயுள்ளது.

இதுகுறித்து விருமாண்டி மற்றும் முத்தையா மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் மதுபாட்டில்கள் பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை கிடந்துள்ளது. மேலும் திருட வந்த மர்ம நபர்கள் கடையில் அமர்ந்து மது அருந்திவிட்டு திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |